கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கான மாதிரி போட்டித் தேர்வுகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் ஊக்கத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், அனைத்து தரப்பினருக்கும் சென்று சேரும் வகையில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையிலும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் வழிகாட்டுதலின்படியும், கரூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இலவசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப்பணியில் சேர ஆர்வமிருந்தும் என்னென்ன பாடங்களை படிப்பது, எவ்வாறு பயிற்சி எடுப்பது, போட்டித்தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியாமல் இருக்கும் நபர்களுக்கு, அவர்கள் எந்த திசையில் பயணித்தால் சரியானதாக இருக்கும் என்பதை விளக்கும் வகையில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கு “கலங்கரை விளக்கம்” என பெயரிடப்பட்டு, கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நேரடி வகுப்புகள் மற்றும் மாதிரித்தேர்வுகள் நடைபெற்று வருகிறது என ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.


கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்ட மைய நூலகத்தில் 16.07.2022 மற்றும் 17.07.2022 ஆகிய தேதிகளில் நடைபெற்ற TNPSC Group-IV (Full Mock Test) மாதிரித்தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற லாவண்யா தாந்தோன்றிமலை, கரூர், மோனிஷா வெண்ணெய்மலை, சு.பிரியதர்ஷினி கரூர் ஆகிய மாணவியர்களுக்கு புத்தகங்கள் மற்றும்,  ஊக்கப்பரிசாக ரூ.1000 பணப்பரிசு வழங்கி  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்  வாழ்த்துத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) கவிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார், மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண