சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றது.  மணலூர் பகுதியில் தொல்லியல் எச்சங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அங்கு மட்டும் அகழாய்வுப் பணி நிறுத்தப்பட்டது. மற்ற மூன்று இடங்களிலும் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.



இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*



 

நேற்று பெய்த கனமழையின் காரணமாக இன்று ஒருநாள் தற்காலிகமாக அகழாய்வு பணிகள் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாளை வழக்கம் போல் பணிகள் நடைபெறும் என அகழ்வாராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்று மழை காரணமாக அகழாய்வுப் பணி நடைபெறவில்லை என்பதால் ஆவணப்பணிகள் மட்டும் செய்யப்படுகிறது.






 

இந்நிலையில் கீழடியில், 2 அடி உயரமுள்ள தானிய கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 348 செ.மீ நீளத்தில் சிவப்பு நிற ஜாடி வடிவ மண்பாண்டம் கிடைத்துள்ளது. கழுத்துப்பகுதி இல்லாத, வாய்ப்பகுதி உட்புறம் மடிந்த நிலையில் உள்ள இதன் சுவர் 2 செ.மீ., தடிமனுடன் உள்ளது. இதன் மைய உள்பகுதி, 30 செ.மீ. சுற்றளவுடன் உள்ளது.



மேலும் சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !

 

இதன் வெளிப்புற மையப்பகுதியில், கயிறு போன்ற வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. கழுத்து பகுதியில், கை கட்டை விரலால் அழுத்தப்பட்ட வடிவமைப்பு உள்ளது. இந்த கொள்கலன், தானியம் சேமிக்க பயன்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மிகவும் நேர்த்தியாக உள்ள இந்த மண்பாண்டம், ஆய்வாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

 

மேலும்  தொல்லியல் ஆர்வலர் கூறுகையில்...,” கீழடியில் கொரோனா  முழு ஊரடங்கு காலகட்டதில் பணிகள் நடைபெறவில்லை. தற்போது மழைப்பொழிவு இருந்துவருகிறது. எனவே செப்டம்பர் மாதத்தோடு அகழாய்வுப் பணியை நிறுத்தாமல் கூடுதலாக இரண்டு மாதம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.