தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் திமுக வெற்றிபெற்று, ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பலரும் திரு ஸ்டாலின் அவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவரும் வரும் வேளையில், நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை திமுகவிற்கு தெரிவித்துள்ளார் .

Continues below advertisement

பார்த்திபன் அவர்கள் இரண்டு ட்வீட்டாக பதிவிட்டு இருந்தார் அதில் அவர், "இன்று...இதோ...இப்போது உதிக்கும் சூரியன், புதிய சூரியனல்ல... உதய சூரியன். நீண்ட காலம் ஆண்ட, பத்தாண்டு பொறுமை சின்னத்தின் முதல்வராக ஆட்சி புரிந்தவர் இனி, இனிய தமிழக முதல்வராக!வாழ்த்துகள் திமுகவின் அபரிமித வெற்றிக்கும், மாண்புமிகு ‘உதய்’சூரியனுக்கும்!”

 

Continues below advertisement

இரண்டாவது ட்வீட்டாக "திரு மு க ஸ்டாலின் அவர்கள் மட்டும் முதல்வர் அல்ல,நானும் முதல்வனே!!!கோவையில் இன்றைய முதல்வருக்கு அன்றே “அடுத்துத் தாங்களே”-என மஞ்கள் துண்டு அணிவித்து வாழ்த்தியதில் முதல்வன் ஆனேன் !"  என்று அவர் பாணியில் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் .