திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஜனவரி 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  வரும் ஜனவரி 27ஆம் தேதி பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபானி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளதையடுத்து மாவட்ட நிர்வாகம் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது. 


பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயில் வளாகம் குடமுழுக்கு விழாவை எதிர்கொள்ளும் விதமாக மின்னொளியில் மிளிரச் செய்யப்பட்டுள்ளது.  குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை பிற்பகல் முதல் சுவாமிக்கு திரையிடப்படவுள்ள நிலையில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடும் நிறுத்தப்படவுள்ளது.


ABP Nadu Exclusive: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் என்னதான் உள்ளது ? - ஹேப்பி நியூஸ் உள்ளே?




 பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வரும் ஜனவரி 27ம் தேதி காலை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.  16 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நடைபெறும் இவ்விழாவை காண இலட்சக்கணக்கான பக்தர்கள் காத்துள்ளனர். மலைக்கோயிலில் சுமார் ஆறாயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாயிரம் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.  


Governor RN Ravi: "சுதந்திர போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்" - நேதாஜி பிறந்தநாளில் ஆளுநர் பேச்சு..!




விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் 90க்கும் மேற்பட்ட யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு ஓதுவார்கள், சிவாச்சார்யார்கள் மந்திரங்கள் முழங்கி வருகின்றனர்.  பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்கப்படுவதோடு பக்தர்கள் அந்த நேரத்தில் மட்டும் இலவசமாக பழனிக்கு வந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  மலைக்கோயில் முதல் பாதவிநாயகர் கோயில் வரை குடமுழுக்கு நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஜனவரி 26ம் தேதி பாதவிநாயகர் கோயில் முதல் படிப்பாதையில் உள்ள அனைத்து கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  


Erode East By Election: “காங்கிரஸை ஜெயிக்க பெரிய கட்சியா இருக்கணும்; எடுத்தோம் கவிழ்த்தோம்னு சொல்ல முடியாது” - அண்ணாமலை




மலைக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை பிற்பகல் நடை அடைக்கப்பட்டு மூலவர் சன்னதியில் பணிகள் துவங்கவுள்ளது.  இதனால் குடமுழுக்கு நாளன்று வரை பக்தர்கள் மூலவரை தரிசிக்க இயலாது.  அதே போல நாளை முதல் தங்கத்தேர் புறப்பாடும் நான்கு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இராஜகோபுரம் முதல் தங்ககோபுரம் வரையிலும் மலைக்கோயில் பிரகாரங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.  இதனால் மலைக்கோயில் இரவு நேரத்தில் தகதகவென ஜொலிக்கும வகையில் உள்ளது.


பழனி மலைக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் அதிகளவிலான பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக கோவில் நிர்வாகம் சார்பில் ஆறாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதில் நான்காயிரம் பேர் நன்கொடையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான அதிகாரிகள் ஆகியோரும் மீதமுள்ள இரண்டாயிரம் பேர் பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.


இதையடுத்து கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பி 51 ஆயிரம் பக்தர்கள் இணையவழியில் பதிவு செய்தனர். இவர்களில் இரண்டாயிரம் பேர் கடந்த 21ம் தேதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு கும்பாபிஷேகத்திற்கு செல்வதற்கான நுழைவுச்சீட்டு இன்றும், நாளையும் வழங்கப்படுகிறது. தேர்வான பக்தர்கள் தங்களது அசல் ஆதார்‌அட்டையை நேரில் காண்பித்து ஹாலோகிராம் பொருத்திய நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். இதையடுத்து இன்று காலை 10 மணியளவில் தேர்வான பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்  பழனி தேவஸ்தான வேலவன் விடுதியில் பெற்று வருகின்றனர்.


பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஒருகோடி ரூபாய் மதிப்பிலான புதிய மின்இழுவைரயில் பெட்டி ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது. பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவரும், தொழிலதிபருமான சந்திரமோகன் தனது சொந்த நிதியில் இருந்து நவீன மின்இழுவைரயில் பெட்டியை வழங்கியுள்ளார். மலைக்கோவிலுக்கு மேலே செல்ல வசதியாக ஏற்கனவே மூன்று மின் இழுவை ரயில்கள் உள்ளன. இவற்றில் 30 பேர் வரை செல்லும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.