நாடாளுமன்றத்தில் எம்பிகளை தகுதி நீக்கம் செய்த மோடி அரசை கண்டித்து கரூர் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் தகுதி நீக்கம் செய்த மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் கராத்தே இளங்கோ தலைமை வகித்தார். மேலும் மாநில செயற்குழு உறுப்பினர் அக்னி அகரமுத்து மற்றும் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரத பிரதமர் மோடியையும், மாநில தலைவர் அண்ணாமலையையும், கண்டித்து அவர்களுக்கு வீர வணக்கம், வீரவணக்கம் என கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் முரளி மற்றும் சுடர்வழவன் உதயா , சுரேந்தர் பங்கேற்றனர்.