பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லாதவர் நித்தியானந்தா. நடிகை ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கிய பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய வித்தியாசமான பேச்சால் தமிழக அளவில் மட்டுமின்றி இந்திய அளவில் ட்ரெண்டிங் சாமியாராகவே வலம் வருகிறார்.


கடந்த சில நாட்களாகவே நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில், அவர் தான் நலமாக இருப்பதாக அறிக்கை விடுத்தார். இந்த சூழலில், நித்தியானந்தாவிற்கு சிலை வைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.




கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ளது பிடதி. இங்கு  நித்தியானந்தா சர்வஜ்னபீடம் அமைந்துள்ளது. இங்கு நித்தியானந்தாவிற்கு சிலை வைத்து அவருக்கு தீப ஆராதனை காட்டப்பட்டுள்ளது. அதுவும் நித்தியானந்தா வீடியோக்களில் காட்சி தரும்போது அமர்ந்திருக்கும் போசிலே அவரின் சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






கடந்த சில ஆண்டுகளாகவே மாயமாக இருக்கும் நித்தியானந்தா கைலாசா தீவில் வாழ்வதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருவார். கைலாசா எங்கே இருக்கிறது என்று அனைவரையுமே எதிர்பார்க்க வைக்கும் அளவிற்கு நித்தியானாந்தாவின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அமைந்து வந்தது.




கடந்த சில நாட்களாகவே நித்தியானந்தா மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், நேற்று தான் ஆரோக்கியணமாக இருப்பதாக நித்தியானந்தா அறிக்கை வெளியிட்டார். மேலும், அந்த அறிக்கையில் கைலாசாவில் இருக்கும் வசதிகளையும் விலாவரியாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், நித்தியானந்தாவிற்கு அவரது பக்தர்கள் சிலை வடித்து தீப ஆராதனை காட்டியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : Jai Bhim Issue: மீண்டும் தலைதூக்கிய ஜெய்பீம் பிரச்சினை: சூர்யா மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு 


மேலும் படிக்க : Ajith Kumar: வெள்ளை சட்டை.. ஏகே 61 கெட்டப்.. இணையத்தை கலக்கும் அஜித்தின் லேட்டஸ்ட் க்ளிக்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண