ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல்ராஜா மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஜெய் பீம் திரைப்படம் விவகாரத்தில் வன்னியர் இன மக்களை அவமதிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளதாக ஸ்ரீ ருத்ர சேனா அமைப்பைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் புகார் அளித்திருந்தார். மேலும், சூர்யா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. அதனடிப்படையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.