பொறியியல் பட்டதாரி கொகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் தண்டனை விவரங்கள் இன்று வெளியானது. முன்னதாக நீதிமன்றம் வந்த யுவராஜ் செய்தியாளர்களிடம் பேசிச் சென்றார். அதில், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். தீர்ப்பை மேல்முறையீடு செய்து தன்னை நிரபராதி என நிரூபிப்பேன். நான் எப்படி கொலை செய்தேன் என தீர்ப்பில் சொல்லவில்லை. கோகுல்ராஜ் கொலை செய்யப்படவில்லை, என் மீது புனையப்பட்ட வழக்கு என்றார். மேலும் கோகுல் ராஜ் ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.


முன்னதாக, கோகுல்ராஜூடன், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரும் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்து வந்தனர். அவர்களுக்குள் நெருக்கமான நட்பு இருந்து வந்தது. கோகுல்ராஜின் சடலம் கைப்பற்றப்படுவதற்கு முதல்நாள் அவரும், சுவாதியும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். 
 
அர்த்தநாரீஸ்வரர் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் சிபிசிஐடி போலீசார், அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததையும், கோகுல்ராஜை மட்டும் ஒரு கும்பல் தனியாக அழைத்துக்கொண்டு காரில் கடத்திச்செல்வதையும் அந்த வீடியோகாட்சிகளில் இடம் பெற்றிருந்தது. 
 
இதையடுத்து, கோகுல்ராஜின் தாயாரின் மனுவை ஏற்று கோகுல்ராஜ் கொலை வழக்கு மதுரை மவாட்ட வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 2015 அக்டோபரில் 1ல் கீழமை நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அந்த ஜாமின் 2018 ஜூன் 2-ல் தேதி ரத்து செய்யப்பட்டது.
நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பின்னர் மதுரை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.