2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


அந்த வகையில் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2024 ஆம் தேதி முதல் 9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி முதல் மே வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும். மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239% ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


கடந்த மார்ச் 12 ஆம் தேதி தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக வெளியான இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.