Cuddalore PMK Member: கடலூரில் பாமக பிரமுகர் சிவசங்கரை 4 பேர் கொண்ட மர்ம கும்பலானது அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது.
பாமக நிர்வாகி மீது அரிவாள் வெட்டு:
கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன்சாவடி பகுதியில் பாமக பிரமுகரான சிவசங்கர் வசித்து வருகிறார். பாமக நிர்வாகி சிவசங்கரை, அவரின் வீட்டருகே 4 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பலானது திடீரென அரிவாளால் வெட்டினர். இதையடுத்து, அந்த கும்பலானது சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியது.
இந்நிலையில், சிவசங்கர் ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேடுதல் வேட்டை:
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் , குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, அவரின் ஆதரவாளர்கள் மருத்துவமனையில் குவிந்து வருவதால், மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக, மருத்துவமனையில் ஏதும் அசம்பாவிதமான சூழல் நிகழாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் , சென்னையில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.