Video : ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி - உடைந்து கதறி அழுத திருமாவளவன், பா.ரஞ்சித்

BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது, திருமாவளவன் கலங்கி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

BSP Armstrong Murder: பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை கண்டு, இயக்குனர் பா. ரஞ்சித் கதறி அழுதுள்ளார்.

Continues below advertisement

கதறி அழுத பா. ரஞ்சித், திருமாவளவன்:

பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், 6 பேர் கொண்ட கும்பலால் நேற்று பெரம்பலூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த விசிக தலைவர் திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கண்டு கலங்கி அழுதார். அப்போது உடனிருந்த இயக்குனர் பா. ரஞ்சித், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கண்டதும் மனமுடைந்து கதறி அழுதார். அவரை திருமாவளவன் தாங்கிப் பிடித்த போது இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல், கண்ணீர் வீட்டு கதறி அழுதார். 

அயனாவரத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல்:

மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு, ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது. அங்கு இறுதி சடங்குகள் அனைத்து செய்து முடித்த பின்பு, பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Continues below advertisement