மேயர் நகரமன்ற தலைவர் பேரூராட்சி தலைவர்களின் மறைமுக தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் கடலூர் மாநகராட்சி ஒருதரப்பு திமுக கவுன்சிலர்கள் 15 க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த மஞ்சகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.


இதனை அறிந்த கடலூர் போலீசார் அங்கு விரைந்து சென்று  அந்த கவுன்சிலர்களை வெளியில் விடாமல் தடுத்து நிறுத்துதியதாக திமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கவுன்சிலர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


மேலும் கடலூர் மாநகராட்சியின் திமுக கவுன்சிலர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஹோட்டலில் இருந்து வெளியே அனுப்புமாறு காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.