முக்கிய அறிவிப்பு - 23.01.2023 அன்று முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) பதிவு செய்திட கடைசி நாள் ஆகும்.


 




கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், பொதுப்பிரிவு , ( 15 வயது முதல் 35 வயது வரை) கல்லுரரி ( 17 வயது முதல் 25 வயது வரை), அரசு ஊழியர்கள்  ( வயது வரம்பு கிடையாது )  மற்றும் மாற்றுத்திறனாளிகள் ( வயது வரம்பு கிடையாது) என ஐந்து பிரிவுகளாக வருகிற ஐனவரி  மற்றும் பிப்ரவரி 2023 ஆம் மாதம் நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியினை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர் த.பிரபுசங்கர்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில். மேற்கண்ட பிரிவுகளில் கபாடி சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, கையுந்துபந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேசைப்பந்து, மற்றும் செஸ் போட்டிகள் மாவட்ட அளவிலும், டென்னிஸ், பளுதுரக்குதல் மற்றும் கடற்கரை கையுந்துபந்து ஆகிய போட்டிகள் மண்டல அளவிலும், நடைபெற  உள்ளதாக தமிழ்நாடு  விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 




 


தற்போது பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் ( 12 வயது முதல் 19 வயது வரை), கல்லுராரியில் பயிலும் மாணவ,மாணவியர்கள் (17 வயது முதல் 25 வயது வரை), மற்றும் பொதுப்பிரிவு  (15 வயது முதல் 35 வயது வரையுள்ள பிரிவினருக்கு மட்டும் மாவட்ட அளவில் கிரிக்கெட்  விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது






இப்போட்டியில் பங்கு பெற ஆர்வமுள்ள பள்ளி, கல்லுரரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள். பொதுமக்கள் அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான (www.sdat.tn.gov.in) முகவரியில் வருகின்ற 23.01.2023 ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறுமாறு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  த.பிரபுசங்கர்   தெரிவித்துள்ளார்.