தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,41,617 ஆக அதிகரித்துள்ளது. இன்று, வெளிநாட்டு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2 சர்வதேச பயணிகளிடம் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும், சாலை மார்க்கமாக ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா நோய்த் தோற்று கண்டறியப்பட்டது.

  


குணமடைவோர் எண்ணிக்கை:  கடந்த 24 மணிநேரத்தில் 695 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,41,617 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98.3% குணமடைந்துள்ளனர்.


இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 8  பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 36,699 ஆக அதிகரித்துள்ளது.  


பாதிப்பின் தீவிரத்தன்மை என்ன? தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சில தினங்களாக  குறைந்து வருகிறது. இருப்பினும், மாநிலத்தின் மொத்த தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 0.6 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 1 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே  கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,01,713 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 (5,64,16,650) கோடியாக அதிகரித்துள்ளது. 




ஒமிக்ரான் தொற்று பாதிப்பு:  மஹாராஷ்ட்ரா, தில்லி, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 213 பேரிடம் கண்டறியப்பட்டது. இவர்களில் 90 பேர் வீடு திரும்பியுள்ளனர்/ குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில்,  தற்போது 89 நாடுகளில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 


உலக சுகாதார மையம் எச்சரிக்கை:


ஒமிக்ரான் தொற்று பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு  அவ்வப்போது உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.  இந்நிலையில், கடந்த வெள்ளிகிழமை, ஒமிக்ரான் தொற்று பரவலின்  தற்போதைய  நிலவரத்தை வெளியிட்டது ( மேலும், விவரங்களுக்கு: Enhancing Readiness for Omicron (B.1.1.529): Technical Brief and Priority Actions for Member States) 


தனது அறிக்கையில், "கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், பாதிப்புகள் இரட்டிப்பாகும் காலம் (Doubling time) கிட்டத்தட்ட 1 முதல் 3  நாட்களாக குறைந்துள்ளது. நிச்சயாமாக,  ஒமிக்ரான் வகை தொற்று, டெல்டா வகையை விட அதிகமாகப் பரவக் கூடியது.   


மேலும், தடுப்பூசிகள் மூலம் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு திறனைப் பெற்றுள்ள நாடுகளில் கூட இந்த பரவல் விகிதம் அதிகரித்து வருகின்றது. இதற்கு ஒமிக்ரானின்  தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்கும் அம்சங்கள் காரணமா? (அ) ஒமிக்ரான் பரவல் மற்றும் நோயின்  தீவிரத் தன்மை காரணமா? என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. இரண்டு காரங்களும் ஒரு சேர இருக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தது. 


முன்னாதாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை , நோய் தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை சிகிச்சைக்காக சந்தேகப்படும் நோயாளிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு பரிசோதனைகளை விரிவுபடுத்தவும், கண்காணிப்பை உறுதிப்படுத்தவும் கோரிக்கை வைத்தார்.