நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நகரமாக விளங்குவது குன்னூர். இங்கு தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பாஸ்டர் இன்ஸ்டிடியூட் உள்ளது. கடந்த சில காலமாக இந்த தடுப்பூசி உற்பத்தி ஆலை பூட்டியுள்ள சூழலில், இந்த ஆலையை திறக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. வில்சன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்ட்வியாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். அவரது கேள்விக்கு இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில், குன்னூரில் மூடப்பட்டுள்ள பாஸ்டர் இன்ஸ்ட்டிடியூட்  ஆப் இந்தியாவில் நவம்பருக்குள் தடுப்பூசி சோதனை உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.