தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு போன்றவற்றை சரி செய்யவும், கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தவும் தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதிஉதவியை அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.




அவரது வேண்டுகோளை ஏற்று பல தரப்பினரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்து வருகின்றனர்.இந்த சூழலில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விக்ரம் 30 லட்சம் ரூபாய் இன்று ஆன்லைனில் பங்களிப்பு செய்தார்.





விக்ரம்  மட்டுமின்றி சிவகார்த்திகேயகன், நடிகர் அஜித் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சமும், பெப்சி திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூபாய் 10 லட்சமும் வழங்கியுள்ளார்.   மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த முதல்வரை சந்தித்து 50 லட்சம் வழங்கினார். பின்பு  ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் நடிகைகள் மட்டும் அல்லாமல் பொதுமக்கள் பலரும் தங்களின் உதவிகளை செய்து வருகிறார்கள் . சிறு குழந்தைகள் முதல் பலரும் இந்த உதவியை செய்து வருகிறார்கள் . சிறுகுழந்தைகள் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பிய பணத்திற்கு முதல்வர் அந்த குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .


எப்படியாவது இந்த நிலையை கடந்துவிட வேண்டும் என்ற எண்ணம் அணைத்து மக்களிடத்திலும் தற்பொழுது இருந்து வருகிறது. அனைவரும் ஒன்றாக மீண்டு வருவோம் ஒரு புதிய விடியல் பிறக்கும்  என்ற நம்பிக்கையை நம்மை சுற்றி இருப்பவர்களிடம் விதைப்போம் .