கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாடு, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழையை சந்தித்து வருகிறது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை புயலாக மாறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஜாவத் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் இன்று உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், வங்கக்கடலில் சற்றுமுன் ஜாவத் புயல் உருவாகியது. இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் முதல் புயல் இதுவாகும்.




தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல்பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை உருவானது. இது அந்தமான் கடலின் மத்திய பகுதியில் புதன்கிழமை நிலவியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வியாழக்கிழமை காலை நிலவியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில்நிலை கொண்டிருந்தது.


இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து சற்றுமுன் புயலாக மாறியது. தொடர்ந்து இந்த புயல் தீவிரமடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரம் – தெற்கு ஒடிசா கரையை வரும் 4-ந் தேதி காலை நெருங்கக்கூடும். இதன்பிறகு, இது வடக்கு – வடகிழக்கு திசையில் நகரவுள்ளது. இந்தபு் புயல் தீவிரமடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரம் – தெற்கு ஒடிசா கரையை வரும் 4-ந் தேதி காலை நெருங்கக்கூடும். இதன்பிறகு, இது வடக்கு – வடகிழக்கு திசையில் நகரவுள்ளது. இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு பெரிய பாதிப்போ, மழை எச்சரிக்கையோ இதுவரை கொடுக்கப்படவில்லை.




இதன்காரணமாக, மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திரம் மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 70 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று முதல் நாளை மறுநாள் (5-ந் தேதி) வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண