1,39,836மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,303 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 168 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 13 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1428 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் 168 பேரும், கோயம்புத்தூரில் 128 பேரும், செங்கல்பட்டில் 98 பேரும், ஈரோட்டில் 75 பேரும், திருப்பூரில் 87 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த மாவட்டங்களில் நேற்றைய பாதிப்பை விட இன்று சற்றுக்குறைந்துள்ளது.
12 வயதுக்குட்பட்ட 93 சிறார்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம்வரை கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் அது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 585 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 53 ஆயிரத்து 668 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 20 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை . இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 665-ஆக உயர்ந்துள்ளது
கோவை இரண்டாம் இடத்தில் உள்ளது. கோவையில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்று பாதிப்புகள் இறங்கு முகத்தில் உள்ளது. கோவையில் இன்று 128 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 44 ஆயிரத்து 132 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் ஒருவர் உயிரிழப்பு. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1672 ஆக உள்ளது. மேலும் 63 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 96,463 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,711 ஆக உயர்வு. மாவட்டத்தில் 579 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 53 பேர் பாதிப்பு. தொடர்ந்து ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா நோய் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.