Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 1,164 பேருக்கு கொரோனா தொற்று 20 பேர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 20  பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் இன்று 1,29,820    மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  1,164 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 152    பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 20  பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1412 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Continues below advertisement

 


சென்னையில் 152 பேருக்கும், கோயம்புத்தூரில் 137 பேரும், செங்கல்பட்டில் 98 பேருக்கும், ஈரோட்டில் 89  பேருக்கும், திருப்பூரில் 73  பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

 

பெரம்பலூர், புதுக்கோட்டை முதல் விருதுநகர் வரையிலான கொரோனா பாதிப்புகள் நிலவரம் பின்வருமாறு,

 

மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 24 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75061-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 18 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 73665-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1169 இருக்கிறது. இந்நிலையில் 227 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 4 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46237-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 10 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 45610-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 548-ஆக  இருக்கிறது. இந்நிலையில் 79 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 16  நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20087-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 12 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Continues below advertisement