ஈரோட்டில் ஒரே நாளில் 331 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது அலையின் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது.

Continues below advertisement

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் மேலும் 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

Continues below advertisement

தமிழ்நாட்டில் கொரோனா  இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளை (ஞாயிறு தோறும்) முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் மேலும் 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. முதல் அலையின்போது ஒரேநாளில்  அதிகபட்சமாக 180 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, இரண்டாவது அலையின் ஒருநாள் பாதிப்பு அதிகமாகியுள்ளது.

Continues below advertisement