கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துவ தேவாலயங்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாக கூறி அருமனை கிறிஸ்துவ இயக்கம், அனைத்து கிறிஸ்துவ ஜனநாயக பேரவை மற்றும் அனைத்து கிறிஸ்துவ இஸ்லாமிய அமைப்புகள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் பனங்கரையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அருள்தந்தை ஜார்ஜ் பொன்னையா , சர்ர்சைக்குரிய வகையில் பேசினார், அவர் பேசும்போது, ”சேகர்பாபுவுக்கு ஒன்னு சொல்கிறேன். நீ எத்தன கோவிலுக்கு குடமுழுக்கு கொடுத்தாலும், மனோ தங்கராஜுக்கு எத்தன கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டாலும் ஒருத்தன் கூட உங்களுக்கு ஒட்டு போடமாட்டான் சரியா, உங்களுக்கு மண்டைகாடு பக்தர்களும் ஓட்டுப்போட போவதில்லை, இந்துக்களும் ஒட்டு போடப்போவதில்லை, நீங்க ஜெயித்தீகன்னா கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் உங்களுக்கு போட்ட பிச்சை என்பதை மறந்துடாதீங்க, உங்க திறமையை வைத்து ஒட்டு வாங்கல, எல்லா எம்.எல்.ஏக்களிடமும் சொன்னோம், பிரின்சிடமும் சொன்னேன், உங்களுக்கு போட சொன்னது, எங்களுடைய ஆயர்கள் கண் அசைப்பாங்க, கிறிஸ்துவ ஊழியர்களும் பெந்தேகோஸ்தே ஊழியர்களும் வீடுவீடாய் போய் சொல்வாங்க, நாகர்கோவில் சுரேஷ்ராஜனிடம் கூட சொன்னோம் , நாங்க கிறிஸ்துவ வீடுகளிடம் ஓட்டுகேட்டோம்” என்றார்.
"நீ அங்கு ஜெபம் செய்யக்கூடாது, பங்குதந்தை இல்லத்தில் ஜீசஸ் படம் வைத்து உள்ளாயா அதை மூடு" என்ன காவல்துறை என்ன அதிகாரி சொன்னார். இதற்கு முன் ஒரு ஆர்.டி.ஒ பெண் இருந்தார். அவர் பக்கா ஆர்.எஸ்.எஸ், என்னைக்கூட மீட்டிங் கூப்பிட்டாங்க என் உடல்நிலை சரியில்லை என்னிடம் கேட்ட கேள்விக்கு நான் இங்கிலீசில் பதில் சொன்னேன், நான் இங்கிலாந்திலும் கனடாவிலும் படித்தவன், என் பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்க்காரன் நிற்கிறான் இவ எங்கபடித்தான்னு எனக்கு தெரியாது, என்னிடம் அஹு உஹும்னு பேசினா, நீங்க அதிகம் படித்தவர்ன்னு சொன்னாங்க. ஆம் நாம் உன்னை விட அதிகமாக படித்தவன் என்றேன் பழைய ஜிப்பாதான் போட்டுருப்பேன், 1989 ல் ஐ.நாவின் முன்பு படமெடுத்து கொண்டவன், 2014-ஆம் ஆண்டில் தான் உங்க மோடிக்கு அமெரிக்காகாரன் விசா கொடுத்தான், பாதர் என்பவன் படித்தவன், பாதிரியார்கள் பூசாரிகளோ மணியடிக்கிறவனோ கிடையாது படித்து பட்டம் பெற்றவர்கள், ஸ்டேன் சுவாமியை கைகால்களை கட்டி வைத்தார்கள், மோடியின் கடைசிகாலம் மிகமிக பரிதாபமாக இருக்கும்” சர்ச்சையாக பேசியுள்ளார்.
"ஆர்.எஸ்.எஸ்காரனாலும் பாஜககாரனலும் தடுக்க இயலாது, மோடியின் கடைசி காலம் பரிதாபமாக இருக்கும், எழுதி வைத்து கொள்ளுங்கள், நாம் வணங்கிற கடவுள் இருக்கிறார்கள் என்றால் அது நடக்கும்" என்றார். ஏற்கனவே ஹைப்பர்டென்சன் மாவட்டமான குமரியில் கிறித்துவ அருள் தந்தை பேச்சால் கோபம் தகிக்கிறது. சமூக வலைத்தளங்களில் கடுமையாக சாடும் ஆர்.எஸ்.எஸ், பாஜக முதல் பொதுவான இந்துகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்திவருகின்றனர்.