தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஓங்கியிருந்த காங்கிரஸின் கை தற்போது கூட்டணி கட்சிகளின் கை பிடித்து நடந்துகொண்டிருக்கிறது. கட்சியை வலுப்படுத்த ஏகப்பட்ட நடவடிக்கைகளை தலைமை எடுத்தாலும் தமிழ்நாடு காங்கிரஸுக்குள் நிலவும் கோஷ்டி பூசல்கள் அந்த நடவடிக்கைகளை நீர்த்து போக செய்வதாக சீனியர் கதர்காரர்களும், அரசியல் பார்வையாளர்களும் கூறுகின்றனர்.




இந்நிலையில் தமிழ்நாட்டில் சம்பிரதாய அரசியல் செய்துகொண்டிருந்தால் காங்கிரஸ் கட்சி இங்கு வளராது என எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ கர்நாடகாவில் நடந்த நகர்ப்புற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்துள்ளது. 2023ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.


அடுத்த 30 ஆண்டுகளு இந்திய அரசியலுக்கு மையமாக பாஜகதான் திகழும் என பிரசாந்த் கிஷோர் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.


தமிழ்நாட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு குழந்தைகளும், பெண்களும் ஆளாவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெண்கள் சாமியாராக வேண்டுமென விரும்பினால் அதற்கான உரிமையை அனைத்து மதங்களிலும் அளிக்க வேண்டும்.


ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் சவாலும், கட்சிக்குள்ளேயே நிலவும் போட்டியும் இருக்கின்றன.




உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் கட்டுமானம் வலிமையாக இல்லை. இருப்பினும் தேர்தலில் 40 சதவீதம் பெண்களுக்கு கொடுப்போம் என பிரியங்கா எடுத்திருக்கும் முயற்சிக்கு எதிர்காலத்தில் பலன் கிடைக்கும்.


தமிழ்நாட்டில் சம்பிரதாய சடங்கு அரசியலை செய்துகொண்டிருந்தால் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடையாது. மக்கள் மனநிலைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு புதிய சிந்தனை வேண்டும்.


அதிமுக ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. ஒரு முன்னாள் அமைச்சரை காவல்துறை இன்னும் தேடுவது வியப்பாக இருக்கிறது” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: காவல்துறையை அனுமதிக்காத ஆர்எஸ்எஸ்.... என்ன நடக்கிறது கோவையில்...?


தமிழ்நாட்டில் புதிதாக 1,155 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று...11 பேர் உயிரிழப்பு


CM stalin On Corona Restrictions: பள்ளிகள், திரையரங்குகள், புத்தகக் கண்காட்சிகள்.. ஒமிக்ரான் அச்சுறுத்தலால் தமிழ்நாடு அரசின் புது கட்டுப்பாடுகள்