பாத யாத்திரை என்ற பெயரில் இரண்டு மாவட்டங்களில் மட்டும் ரூ. 1.75 கோடி அண்ணாமலை வசூல் செய்துள்ளார் என்றும் இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது எனவும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


 




கோடிக்கணக்கில் வசூல்:


கரூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எம்பி ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”பாதயாத்திரை என்ற பெயரில் அண்ணாமலை கோடிக்கணக்கில் வசூல் செய்கிறார். காவல்துறையில் பதவியில் இருக்கும் போதே பிஜேயின் கருப்பு ஆடாக இருந்துள்ளார் என  எம் பி ஜோதிமணியும், 5 ஆண்டுகளில் தொகுதி பக்கம் மக்களை சந்திக்காத சகோதரி ஜோதிமணி வேடந்தாங்கல் பறவை போல தேர்தலுக்காக மக்களை சந்தித்து போட்டோ சூட் நடத்தி வருகிறது என கிண்டல் செய்த அண்ணாமலை, கர்நாடகா துணை முதல்வர் சிவகுமாரிடம் தேர்தலுக்காக ஜோதிமணி பணம் வாங்கினார்.


 




தேவைப்படும் பட்சத்தில் ஆதாரத்தை வெளியிடுவேன். ஜோதிமணி ஒரு பெண்  என்பதால் பிழைத்து போகட்டும் என அண்ணாமலையும், ஒருவருக்கொருவர் அரசியல் தாண்டி தனிப்பட்ட விமர்சனங்களை வைத்து வந்தனர். இந்நிலையில் பாதயாத்திரை என்ற பெயரில் இரண்டு மாவட்டங்களில் மட்டும் ரூ. 1.75 கோடி அண்ணாமலை வசூல் செய்துள்ளார் என்றும் இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


 




ஆதாரம்:


இந்த கொள்ளையில் அண்ணாமலைக்கு தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக குற்றச்சாட்டை வைக்கிறேன். இந்த யாத்திரையை வசூலுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். நாங்களும் யாத்திரை நடந்தோம் யாரிடம் ஒரு பைசா கூட வாங்கவில்லை எனவும், செய்தியாளர் ஒருவர் கரூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஐந்து பேர் சொந்தம் கொண்டாடுகின்றனர் என்று கேள்வி எழுப்பியதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது வெளியிடுவேன் என்று கூறி சென்றுவிட்டார்.


Join Us on Telegram: https://t.me/abpdesamofficial