16-வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கி உள்ள நிலையில் கொரோனா தொற்றால் பாதிப்பில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் தமிழத்தில் உள்ள நிதி நிலையை சீர் செய்யவும் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



இந்த பொருளாதார ஆலோசனை குழுவில் உலக அளவில் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்களான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமனியம், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஜீன் ட்ரீஸ், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ் நாராயண் ஆகியோர் இருப்பார்கள் என ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்


https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/21/025757cbd3c05599b2458459cc4a3a8a_original.jpg