கேள்வி : தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதா?
பதில் : தமிழ்நாட்டில் ஊரடங்கு வரும் 28-ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேள்வி : புதிய ஊரடங்கு எவ்வாறு அமல்படுத்தப்பட உளளது?
பதில் : தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களும் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
கேள்வி : எந்தெந்த மாவட்டங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
பதில் : கொரோனா பாதிப்பு ஏற்கனவே அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் முதல் வகையாகவும், தொற்று பாதிப்பு ஓரளவு குறைவாக உள்ள 23 மாவட்டங்கள் இரண்டாவது வகையாகவும், தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ள 4 மாவட்டங்கள் மூன்றாவது வகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
கேள்வி : முதல் வகை மாவட்டங்கள் எவை?
பதில் : கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை.
கேள்வி : இரண்டாவது வகையில் உள்ள 23 மாவட்டங்கள் எவை?
பதில் : அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்களை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடில திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர்.
கேள்வி : எந்த மாவட்டங்கள் மூன்றாவது வகையில் உள்ளது?
பதில் : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு.
கேள்வி : முதல் வகையில் உள்ள 11 மாவட்டங்களில் ஏதேனும் புதிய தளர்வுகள் உள்ளதா?
பதில் : முதல் வகையில் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களுக்கு எந்தவித புதிய தளர்வுகளும் இல்லை. ஏற்கனவே உள்ள அதே கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர உள்ளது.
கேள்வி : இரண்டாவது வகை மாவட்டங்களில் ஏதேனும் புதிய தளர்வுகள் உண்டா?
பதில் : வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகளும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
கேள்வி : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எவற்றுக்கு அனுமதி?
பதில் : குழந்தைகள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவு இல்லாமல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான கண்காணிப்பு/ பராமரிப்பு, சீர்த்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ-பதிவில்லாமல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.
கேள்வி : போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?
பதில் : மூன்றாவது வகை மாவட்டங்களில் மட்டும் மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கேள்வி : சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுமா?
பதில் : ஆம். சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் நலன் கருதி காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.
கேள்வி : சென்னைக்குள் பயணிக்க இ-பதிவு முறை உண்டா?
பதில் : வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ - பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
கேள்வி : திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி உண்டா?
பதில் : முதல் வகையில் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இ-பதிவு மாவட்ட நிர்வாகங்களால் வழங்கப்படாது. இரண்டாவது வகையில் உள்ள 23 மாவட்டங்கள் மற்றும் மூன்றாவது வகையில் உள்ள 4 மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க இ-பதிவுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கேள்வி : சுற்றுலா தளங்கள் செல்ல இ-பதிவு வழங்கப்படுமா?
பதில் : நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக மட்டுமே இ-பதிவு வழங்க அனுமதிக்கப்படும்.