இனி வாரத்திற்கு 7 நாளும் மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை இருக்கும். இதற்கான ஒப்புதலை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் நேற்று அளித்தார்.


இந்த தகவலை மத்திய அமைச்சர் எல்.முருகன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் இனி வாரத்திற்கு 7 நாளும் மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை..! மேட்டுப்பாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அப்பகுதி மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காகவும், தினசரி கல்லூரி பயிலும் மாணவர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில்,






மேட்டுபாளையம் - கோயம்புத்தூர் வரை செல்லும் ரயில் இனி வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும் தினசரி சேவையை அதிகரிக்க ஒப்புதல் வழங்கிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு.@AshwiniVaishnaw ஜி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.






மேலும் எழும்பூர் - திருச்செந்தூர் வரை செல்லும் விரைவு ரயில் சேவையை பாபநாசம் பகுதி மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காக அப்பகுதி ரயில் நிலையத்தில் நிறுத்த ஒப்புதல் அளித்தமைக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.






கோவை - மேட்டுப்பாளையம் இடையே ஞாயிற்றுக்கிழமை தவிர, பிற நாட்களில் இயக்கப்படும் மெமு ரயில், கோவையிலிருந்து மாலை, 3:45 மணிக்கு புறப்பட்டு மாலை, 4:30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

இதேபோல், மேட்டுப்பாளையம் - கோவை இடையே ஞாயிற்று கிழமை தவிர, பிற நாட்களில் இயக்கப்படும் மெமு ரயில், மேட்டுப்பாளையத்திலிருந்து காலை, 10:55 மணிக்கு புறப்பட்டு காலை, 11:40 மணிக்கு கோவையை சென்றடையும்.


இந்த ரயில், வடகோவை, துடியலுார், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ஆகிய ரயில்வே நிறுத்தத்தில்  நின்று செல்லும்.