சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சுமார் 21 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலின்றி நிலுவையில் உள்ள நிலையில், இவற்றை நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கிண்டி ராஜ் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோரும் ஆளுநரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், கூட்டுறவு சங்கங்கள், உள்ளிட்ட ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
நிலுவையில் உள்ள 21 மசோதாக்கள்
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சுமார் 21 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலின்றி நிலுவையில் உள்ள நிலையில், இவற்றை நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், சித்த மருத்துவ பல்கலை கழக மசோதாவுக்கு ஒப்புதல் தரவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: RN Ravi Latest Speech : தமிழ்.. தமிழ்நாடு.. தமிழர்கள்..பாய்ண்ட்டுகளை அடுக்கி புகழ்ந்த ஆளுநர் ரவி
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தி.மு.க. வெற்றி பெற்றபோது ஆளுநராக பொறுப்பு வகித்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு, ஆர்.என்.ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தொடரும் மோதல் போக்கு
ஆர்.என்.ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் அவரது பல்வேறு செயல்பாடுகளுக்கு, திமுக அரசு கடும் அதிருப்தியை தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
முன்னதாக, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா உள்ளிட்டவைகளை நீண்டகாலம் கிடப்பில் போட்டு வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்நிலையில் ஆளுநர் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடந்து கொள்கிறார் எனக்கூறி திமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆளுநர் - முதலமைச்சர் இடையிலான இந்த சந்திப்பு தமிழ்நாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும் படிக்க: 1 Year of Stalin Govt: திமுக அரசுக்கு அழுத்தம் தருகிறாரா ஆளுநர்? அழுத்தம் திருத்தமாக வந்த பதில்கள் இதோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்