தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தி.மு.க. வெற்றி பெற்றபோது ஆளுநராக பொறுப்பு வகித்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு, ஆர்.என்.ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.


ஆளுநர் ஆர்.என்.ரவியின் பல்வேறு செயல்பாட்டிற்கு, தி.மு.க. அரசு கடும் அதிருப்தியை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்தநிலையில், ஆர்.என்.ரவி ஆளுங்கட்சியான தி.மு.க. அரசுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறாரா? என்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் ஏபிபி – சி வோட்டர் கருத்துக்களை கூறியுள்ளனர்.


ஆம். இது நியாயமற்றது :




தி.மு.க. அரசுக்கு ஆளுநர் அழுத்தம் தரும் வகையில் செயல்படுகிறார என்றும், இது நியாயமற்றது என்றும் தி.மு.க. கூட்டணியினர் 56.9 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 39.2 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 62.5 சதவீதமும், மக்கள் நீதிமய்யத்தினர் 54.5 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியினர் 38.5 சதவீதம் பேரும், மற்றவர்கள் 44.4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தம் 51.9 சதவீதம் பேர் ஆளுநர் ஆளுங்கட்சிக்கு அழுத்தம் தருகிறார் என்றும், இது நியாயமற்றது என்றும் கூறியுள்ளனர்.


ஆம். ஆனால், நியாயமானது :


ஆளுநர் ஆர்.என்.ரவி தி.மு.க. அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார் என்றும், அவரது நடவடிக்கை நியாயமானது என்றும் தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 12.9 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் 29.4 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 6.3 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதமய்யத்தினர் 18.2 சதவீதம் பேரும், நாம் தமிழர் 38.5 சதவீதம் பேரும், மற்றவர்கள் 11.1 சதவீதம் பேரும் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர். மொத்தம் 18.9 சதவீதம் பேரும் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.


முதல்வரின் ஆட்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் ரீதியாக நெருக்கடி தருகிறாரா..?



கண்டிப்பாக இல்லை :


ஆளுங்கட்சிக்கு அழுத்தம் அளிக்கும் வகையில் ஆளுநர் செயல்படவில்லை என்று தி.மு.க. கூட்டணியினர் 9.9 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 13.7 சதவீதம் பேரும், மக்கள் நீதிமய்யத்தினர் 9.1 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் 7.7 சதவீதம் பேரும் என மொத்தம் 10.3 சதவீதம் பேர் இதே கருத்தை கூறியுள்ளனர்.




உறுதியாக கூற முடியாது :


ஆளுநர் செயல்பாடு ஆளுங்கட்சிக்கு அழுத்தம் தருவதாக உறுதியாக கூற முடியாது என்று தி.மு.க. கூட்டணியினர் 17.5 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணியினர் 17.6 சதவீதம் பேரும், அ.ம.மு.க.வினர் 31.3 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். மக்கள் நீதிமய்யத்தினர் 18.2 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சியினர் 15.4 சதவீதம் பேரும், மற்றவர்கள் 44.4 சதவீதம் பேரும் இதே கருத்தை கூறியுள்ளனர். மொத்தம் 18.9 சதவீதம் பேர் இந்த கருத்தை கூறியுள்ளனர்.


முழு கருத்துக் கணிப்பு விவரம் :




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண