CM Stalin : போதைப்பொருள் தொடர்பான காவல்துறையின் குறும்படங்களால் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும். போதைப்பொருள் ஒழிப்பில் அனைவரும் கைகோர்த்திடுவோம்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு குறும்பட போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த குறும்பட போட்டியில் ’எழவு' என்று குறும்படம் முதல் பரிசை வென்றது. போதைப் பழக்கத்திற்கு எதிராக விழப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படத்தை இயக்கிய பிரகதீஸ் என்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இரண்டாவது பரிசு 'அன்பு' என்ற குறும்படம் இயக்கிய 11ஆம் வகுப்பு மாணவருக்கு ரூ.50,000 வழங்கப்பட்டது. மேலும் 3வது பரிசு பெற்ற குறும்படம் 'அன்பின் போதை போலீஸ் ஆகும்’ என்ற குறும்படத்திற்கு ரூ.25,000 வழங்கப்பட்டது. பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போதைப்பொருள் ஒழிப்புக்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும்பட போட்டியில் வென்ற எழவு, அன்பு, அன்பின் போதை போலீஸ் ஆகிய குறும் படங்களை இயக்கிய பிரகதிஸ், ஹேம்நாத், கிருஷாங்க் நாராயணன், மனோஜ் கண்ணன் ஆகியோருக்கு பரிசுகளை வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”போதைப்பொருள் ஒழிப்பில் அரசின் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளை செய்ய வலியுறுத்தி வருகிறேன். போதைப்பொருள் தொடர்பான காவல்துறையின் குறும்படங்களால் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும். போதைப்பொருள் ஒழிப்பில் அனைவரும் கைகோர்த்திடுவோம்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க
Kachchatheevu : ’கச்சத் தீவில் புத்தர் சிலை’ புனித அந்தோணியார் ஆலய விழாவை முடக்கும் முயற்சியா..?