CM Stalin :  மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


தமிழ்நாடு அரசின் முத்திரைப்பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர். நான்காம் நாளாக நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 
 
”சில திட்டங்களில் தேக்க நிலை காணப்படுவதை அறிவீர்கள். அதனை நிவர்த்தி செய்வது முக்கிய கடமை. எந்த துறையின் திட்டங்களாக இருந்தாலும், அது மக்களை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. திட்டங்களை சீரிய முறையில் நிறைவேற்றினால் உலக அளவில் ஒளிர முடியும். ஆய்வுக்கூட்டங்கள் திட்டத்தின் வெற்றிக்கு அடித்தளமிடும். 
 
அரசு செயலாளர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் 2 மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்க வேண்டும்” என்றார்.


மேலும், ”அவர் கூறியதாவது, திட்டங்களை தொடங்கும்போது இருக்கும் வேகம் திட்டங்களை முடிக்கும் வரை தொடர வேண்டும்.  திட்டங்களை முழுமையாக செயல்படுத்தினால் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே  முதன் மாநிலமாகும் தமிழ்நாடு. 2 மாதங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி முடிக்க வேண்டும். மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிலுவையிலுள்ள அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்க வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.