மத்திய அரசு இன்று தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. தமிழில் வெளியான சூரரைப் போற்று, மண்டேலா மற்றும் சிவரஞ்சனியும், இன்னும் சில பெண்களும் படங்கள் விருதுகளை குவித்துள்ளது. சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
இந்த நிலையில், விருதுகளை குவித்த தமிழ் திரையுலகின் படைப்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "68வது தேசிய திரைப்பட விருதுகளில் விருதுகளை குவித்துத் தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ள தம்பி சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ், அபர்ணாபாலமுரளி உள்ளிட்ட சூரரைப் போற்று படக்குழுவினருக்கும்,
வசந்த, லட்சுமிபிரியா, ஸ்ரீகர்பிரசாத் உள்ளிட்ட சிவரஞ்சனியும், இன்னும் சில பெண்கள் படக்குழுவினருக்கும், மடோனா அஸ்வின், யோகிபாபு உள்ளிட்ட மண்டேலா படக்குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள்.
அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துக்கள். சமூகப்பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும். “
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : Rajinikanth Speech: ”ரசிகர்கள் சந்நியாசியாகிட்டாங்க.. நான் இங்க நடிகனா நிக்குறேன்” - ரஜினி சொன்னது என்ன?
மேலும் படிக்க : Ayyappanum Koshiyum: தமிழில் சூரரைப்போற்று.. மலையாளத்தில் ’அய்யப்பனும் கோஷியும்’: அவார்டுகளை அள்ளிய மாஸ் ஹிட்ஸ்
மேலும் படிக்க : National Film Awards 2022: கோலிவுட்டில் தேசிய விருதுகளை குவித்த திரைப்படங்கள்.. முழு பட்டியலும் உள்ளே..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்