சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வு ஒன்றில் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டு பேசினார்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொஸைட்டி ஆப் இந்தியா சார்பில் கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகர வாழ்வு என்ற தலைப்பில், ஆன்மீக வாழ்வு நிகழ்வு நடைபெற்றுவருகிறது. ஸ்ரீ ராமா கல்யாண மண்டபத்தில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டு பேசினார்.






அப்போது பேசிய ரஜினிகாந்த், “ ராகவேந்திரா பிறந்து வளர்ந்தது பெரிதாக யாருக்கும் தெரியாது. ராகவேந்திரா படம் வந்த பிறகும் தான் எல்லோருக்கும் தெரிந்தது. அதே போல பாபாஜியும்  ‘பாபா’ படம் வெளிவந்த பின்னரே நிறைய பேருக்கு தெரிந்தார். பாபா படத்தை பார்த்து நிறைய பேர், யோகதா சத்சங்கத்தில் இணைந்து இருக்கிறார்கள் என்று சங்கத்தை சேர்ந்தவர்களே சொல்லி இருக்கிறார்கள்.


பாபா படத்தில் அவ்வளவு சோதனைகள்


எனக்கு மிக சந்தோஷமான விஷயம் என்னவென்றால் யோகதா சத்சங்கத்தில் எனது ஒரு ரசிகர்கள் சன்னியாசியாக ஆகியிருக்கிறார்கள். ஆனால் நான் இன்னும் இங்கு நடிகனா நிற்கிறேன். பாபா படத்தில் அவ்வளவு சோதனைகள் ஏன் வந்தது என்பது இப்போதுதான் புரிகிறது.


 


 




பரஹம்ச யோகனந்தா நிறைய பேருக்கு தெரியாது. அவருக்கு சின்ன வயசுல இருந்து நிறைய சக்தி இருந்தது. யோகனந்தா வாழ்கையில் நடந்த உண்மை சம்பவங்களைத்தான் பாபா படத்தில் வைத்து இருந்தோம். பாபா, ஸ்ரீராகவேந்திரா படங்களே எனக்கு ஆத்மதிருப்தி கொடுக்க படங்கள்” என்று பேசினார்.