அரசு முறை பயணமாக துபாய் சென்ற  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை  நாளை திறந்து வைத்தார். அதனை அடுத்து, இன்று அபுதாபி சென்றிருக்கும் அவர், தமிழ் மக்களை சந்தித்து உரையாடி வருகிறார். 


அப்போது பேசிய அவர், ”உங்கள் அன்பால் திக்குமுக்காடி போயிருக்கிறேன்.. நான் பணத்தை எடுத்துக்கிட்டு வரவில்லை.. தமிழர்கள் மனத்தை எடுத்து கொண்டு வந்திருக்கிறேன். ஒரு புறம் கடந்த கால அகழாய்வு, மறுபுறம் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயலாற்றி வருகிறேன். தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும். இதற்காக உழைத்து கொண்டிருக்கிறேன். துபாய் புர்ஜ் கலிஃபாவில் செம்மொழியான தமிழ் மொழியா பாடல் ஒளிந்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது” என பேசி வருகிறார்.


வீடியோவை நேரலையில் காண:



தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டை நோக்கி தமிழர்களை ஈர்க்கும் பயணமாக எனது பயணம் அமைந்திருக்கிறது. Do or Die என்பார்கள். ஆனால், செய்து முடித்துவிட்டு செத்துமடி என்பதே புதுமொழி” என தெரிவித்திருக்கிறார்.


 முன்னதாக, தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, ”முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு எனது முதல் வெளிநாட்டுப் பயணம். இது, தமிழ்நாட்டின் முதலீட்டிற்கானப் பயணம். கடந்த இரண்டு நாட்களாகப் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கான முதலீடுகளுக்குரிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதையும், துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரத்தில் நம் செம்மொழியான தமிழ் வண்ண வண்ண விளக்குகளில் ஒளிர்ந்ததையும், தமிழ்நாட்டின் பெருமை - பாரம்பரியம் - அகழ்வாய்வுகள் காட்டும் தொன்மை ஆகியவற்றின் சிறப்புகள் உலகறிய வெளிப்பட்டதையும், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்களும் தமிழ்நாட்டு மக்களும் அறிந்திருப்பீர்கள். 


தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு அரணாக விளங்கும் அரசுதான், தமிழ்நாட்டை ஆளும் கழக அரசு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் கழக அரசு முனைப்புடன் உள்ளது. அமீரகப் பயணம் அதற்கேற்ற வகையில் முழுமையான வெற்றியைத் தந்துள்ளது. கடல் கடந்து சென்றேன். கை நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அதற்கேற்ற முதலீடுகளையும் பெற்றேன். திரைகடலோடித் திரவியம் தேடும் தமிழ்ப் பண்பாட்டின் வழியே பயணித்து, மீண்டும் உங்களை சந்திக்கத் தாய்த் தமிழ்நாடு வருகிறேன்!" என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண