சிறுவனின் பெற்றோரிடம் மத்திய சென்னை கோட்டாட்சியர் இளங்கோவன், மயிலாப்பூர் வட்டாட்சியர் நந்தினி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் சிறுவனின் உடலை பெற்றோர் வாங்கி கொண்டனர். இதனிடையே முதன்மைக்கல்வி அலுவலரும் அறிக்கை வாயிலாக பள்ளி நிர்வாகத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளனர்


அந்த அறிக்கையில், “ ஆழ்வார் திருநகர் அனெக்சர், முதல் மெயின் ரோடு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு கல்வி பயின்று வந்த மாணவர் தீக்ஷித் மீது பள்ளி வளாகத்தில், பள்ளி பேருந்து 28.032022 அன்று மோதி விபத்து ஏற்படுத்தியதன் காரணமாக மரணமடைந்தது குறித்து பின்வரும் வினாக்களுக்குரிய விளக்கத்தினை பள்ளியில் தாளாளர் மற்றும் பள்ளியின் முதல்வரி தனித்தனியாக இந்த அறிக்கை கிடைக்கப்பெற்ற  24 மணி நேரத்திற்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


1 பள்ளி நிர்வாகத்தால் இயக்கப்படும் பேருந்துகளுக்கென தனியாக பொறுப்பு பணியாளர் நியமனம் செய்யப்படாதது. பள்ளி அளவில் பேருந்துக் குழு அமைத்திடாதது.


2. மாணவர்களின் பாதுகாப்பு மீது எவ்வித அக்கறையுமின்றி 64 வயது முதியவரை பேருந்தின் ஓட்டுநராக நியமனம் செய்தது.


3. பள்ளி வளாகத்தில் பேருந்து வந்து செல்லும் நிலையில் பள்ளி வளாக பேருந்து வழி REDத்திஞ்சவ்வித வேகத்தடை அமைத்திடாதது


4.பேருந்தில் இருந்து மாணவர்கள் இறங்கிய பின்பு அம்மாணவர்கள் அனைவரும் தங்களது வகுப்பறைகளுக்கு சென்றடைந்தனர் என்பதனை பள்ளி முதல்வர் கவனிக்க தவறியது.



                                                                   


5.பள்ளி முதல் பாடவேளை தொடங்குவதற்கு முன்பு வரை, பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர்களை ஒழுங்குபடுத்திட வேண்டிய கடமையில் இருந்து உடற்கல்வி ஆசிரியரை கொண்டு கவனிக்கத்தவறியது. உடற்கல்வி ஆசிரியர் விடுப்பு   எனும் போது மாற்று பொறுப்பாசிரியரை நியமனம் செய்திடாதது.



                                                                 


6. பள்ளித் தாளளர் விபத்து நடந்தது குறித்து அறிந்திருந்தும் பள்ளிக்கு பிற்பகல் வரை வருகை புரியாமல் இருந்தமை மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு உரிய தகவல் அளித்திடாதது" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


 


சென்னை, வளசரவாக்கத்தில் அமைந்துள்ளது ஆழ்வார் திருநகர். இந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று காலை இந்தப் பள்ளியில் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணிபுரியும் பூங்காவனம் பள்ளி வேனை  ஓட்டிச் சென்றுள்ளார். பூங்காவனம் மாணவன் தீக்‌ஷித் பின்னால் நடந்து வந்ததை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பூங்காவனம் அலட்சியமாக வாகனத்தை ஓட்டியதால் வேன் மாணவன் தீக்ஷித் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாணவன் தீக்‌ஷித் பரிதாபமாக உயிரிழந்தார். 


இந்நிலையில் உயிரிழந்த மாணவர் தீக்‌ஷித்தின் தாய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “என்னுடைய மகன் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வேனில் சென்றார். அடுத்த 10 நிமிடங்களில் என் மகனுக்கு விபத்து நடைபெற்றதாக தொலைப்பேசி அழைப்பு வந்தது. அத்துடன் ஒரு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கூறியிருந்தனர். அங்குச் சென்ற பார்த்தபோது அவன் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறான் என்று தெரிவித்தனர். அதன்பின்பு என்னுடைய மகன் இறந்துவிட்டான் என்று தெரிவித்தனர். இன்று காலை அவன் வெள்ளை சட்டை அணிந்து சென்றான். அந்தச் சட்டை முழுவதும் இரத்தக்கறை படிந்துள்ளது. 7 வயது மகன் இப்படி இறந்துள்ளது எங்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 என்னுடைய மகனிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இதுவரை யாரும் சரியாக தெரிவிக்கவில்லை. அவன் லஞ்சு பேக்கை விட்டு மீண்டும் எடுக்க சென்ற போது இந்த விபத்து நடந்ததாக கூறுகின்றனர். ஆனால் யாரும் இதுவரை தெளிவாக கூறவில்லை. அந்தப் பள்ளியின் தாளாளரை கைது செய்தால் மட்டுமே என்னுடைய மகனின் உடலை வாங்க முடியும். அதற்கு எவ்வளவு நாளாகினாலும் பரவாயில்லை” எனக் கூறியிருந்தார்.