கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 


இந்நிலையில், சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்து அதை நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் தெரிவித்தார்.


இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் முறையாக பேசிய உதயநிதி ஸ்டாலினிக்கு பதிலளித்த முதலமைச்சர், ”மாண்புமிகு உறுப்பினர் உதயநிதி” என குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன் கையில் வைத்து கொண்டு எவ்வாறு பணியாற்றினாரோ, அதே வழியில் நானும் பணியாற்றி வருகிறேன். அதிமுகவைச் சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர் அருண்குமாரும், திமுகவை சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும் மாற்றுத்திறனாளிகள் குறித்து கோரிக்கைகளை வைத்துள்ளனர்.



நான் நிச்சயமாக அவற்றை படிப்படியாக நிறைவேற்றுவேன். நிச்சயம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள பிரச்சனைகளுக்கான பரிகாரத்தை இந்த அரசு காணும்” என பேசி இருக்கிறார். மேலும், இன்று விளையாட்டு தொடர்பான பல அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். விளையாட்டை ஊக்கப்படுத்தும், மேம்படுத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் போதி தர்மரின் மரபணுவில் வந்தவர் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவித்தார்.




பிற முக்கியச் செய்திகள்:






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண