Mk Stalin on Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்:
வரும் 2025-26 நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை, அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் அதில் உள்ள முக்கிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “
மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்..
ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்..
- இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம்
- தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்
- புதிய நகரம்
- புதிய விமான நிலையம்
- புதிய நீர்த்தேக்கம்
- அதிவேக ரயில் சேவை
என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன!
‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது #TNBudget2025!
அமைச்சசர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்” என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.