குடியரசு தினவிழா ஊர்திகள் அணிவகுப்பு விழாவில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆண்டுதோறும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு, பல்வேறு மாநில அணிவகுப்பு ஊர்திகள் நடைபெறும். இந்த நிலையில், நடப்பாண்டிற்கான குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் எழுதிய கடிதத்தில், விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.