சித்ரா பௌர்ணமி உருவானா வரலாறு 


பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக  விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களும் சிறப்புமிக்க மாதங்களாக கருதப்படுகிறது. அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள் அண்ணாமலையார் கோவிலில் கோலாகலமாக நடைபெறும்.  திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதங்களிலும் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம். பார்வதி தேவி வரைந்த குழந்தையின் சித்திரம் மிகவும் தாதுரவமாக இருந்தது. சிவ பெருமான் அந்த சித்தரத்தின் மீது மூச்சு காற்றை படர செய்து சித்தரத்திற்கு உயிர் கொடுத்தார். உயிர் பெற்ற குழந்தை தவிழ்ந்ததை பார்த்து பார்வதி தேவியும் மகிழ்ந்தார். சித்திரத்தில் உருவானதால் அக்குழந்தை சித்திரகுப்தன் என அழைக்கப்பட்டார். அவ்வாறு சித்திர குப்தன் பிறந்தநாள் தான் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி திதி பின்னர் அந்த குழந்தை பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தனாக பிரம்மாவால் நியமிக்க பட்டார் இதுவே சித்திர பௌர்ணமி உருவான வரலாறு என புராணங்கள் கூறுகிறது. இந்த நிலையில்தான்  ஆண்டிற்கு ஒருமுறை சித்திரை மாதம் வரக்கூடிய சித்ரா பௌர்ணமி என்பது உலக பிரசித்தி பெற்ற ஒன்று.  இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து பௌர்ணமி நிலவில் கிரிவலம் வருவது வழக்கம். 


 




திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 2500 சிறப்பு பேருந்து, 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டும் 


அதன்படி இந்த ஆண்டுக்கான  சித்ரா பௌர்ணமி இன்று அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 5:47 மணிக்கு நிறைவடைய உள்ளதாக அண்ணாமலையார் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து இன்று திருவண்ணாமலைக்கு வருகை தருவதால் 2500 சிறப்பு பேருந்துகளும், 6 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது.  அதுமட்டுமின்றி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும், கிரிவலப் பாதை முழுக்க 350-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். பக்தர்களின் பாதுகாப்பிற்காக திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன் கிரிவலப் பாதை முழுக்க பல்வேறு இடங்களில் உயர் கோபுரம் அமைத்து தீவிரமாக பக்தர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 




 சமிதரிசனம் செய்யும் பக்தர்களுக்கு மோர் பிஸ்கட் 


இந்த நிலையில் இன்று அதிகாலை அண்ணாமலையார் திருக்கோவில் நடைதிறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படும் பக்தர்கள்  வெயிலில் நிற்காமல் இருக்க கூடாரம் அமைத்துள்ளனர். இந்த கூடாரம் ராஜா கோபுரம் பகுதியில் இருந்து, பண்ணிர்கோல்ட்டு கவரிங், காந்திசிலை ,பூதநாராயணன் கோவில் வரையில் அமைக்கப்பட்டு இருந்தது, மேலும் பக்தர்களின் பாதங்கள் சுடாமல் இருக்க தேங்க நார் கம்பளத்தில் தண்ணீரை ஊற்றி வருகின்றனர். கோடை வெயிலை பக்தர்கள் சமாளிக்கும் வகையில் திருக்கோவிலுக்குள் பல்வேறு இடங்களில் தண்ணீர் பாட்டில்கள், குளிர்ந்த மோர், குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள், மிட்டாய்கள் ,தர்பூசணி  உள்ளிட்டவைகள் தொடர்ந்து பக்தர்களுக்கு தன்னார்வலர்களால் வழங்கப்பட்டு வருகின்றனர். உள்ளே சென்று சமிதரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களை  திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியேற்றப்படுகிறார்கள்.  அதுமட்டுமின்றி கொளுத்தும் வெயிலை சற்றும் பொருட்படுத்தாத பக்தர்கள் கொளுத்தும் வெயிலிலும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் காலில் காலணியின்றி அண்ணாமலைக்கு அரோகரா பக்தி முழக்கமிட்டு கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பக்தர்களின் பாதங்கள் சுடாமல் இருக்க 20 நிமிடங்கள் முதல் 1 மணி  மாலைக்குள் தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.  மேல் சித்ரா பௌர்ணமி நிலவு வந்தவுடன் கிரிவலப் பாதையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.