இந்திய ரயில்வே, வெப்ப அலை குறித்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் எந்த தினங்களில் வெப்ப அலை வீசக்கூடும், எந்த பகுதி வெப்ப அலையால் பாதிக்கப்படும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தான தகவலை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. 


வெப்ப அலை:


தெற்கு ரயில்வே  மண்டலத்துக்கு உட்பட்ட தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.


உள் கர்நாடகா, ராயலசீமா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் அடுத்த 5 நாட்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஜார்கண்ட், பீகார், தெலுங்கானா, கிழக்கு உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 27 வரை வெப்ப அலை வீசக்கூடும்.


ஏப்ரல் 27 அன்று கொங்கன் பகுதியில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வறண்ட வானிலை:


ஏப்ரல் 23 முதல் 27 வரை தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால் மற்றும் கேரள & மாஹே மீது தெற்கு ரயில்வே வெப்ப வானிலையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிழக்கு கடற்கரை இரயில்வே & தென்-மத்திய இரயில்வே பகுதிகளான கடலோர ஆந்திரப் பிரதேசம் & யானம் மற்றும் தென் மத்திய இரயில்வே பகுதியான ராயல்சீமா ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 23, 24 வெப்ப வானிலை நிலவும்.




முன்னெச்சரிக்கை:


வெப்ப அலை வீசக்கூடிய தினங்களில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் கீழ்கண்ட முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது


ரயில் நிலையங்கள், நடைமேடைகள் மற்றும் ரயில் பெட்டிகளில் குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் எனவும் நிழல்கள், குளிர்ந்த கூரைகள் போன்றவற்றின் மூலம் குளிரூட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாகம் இல்லாவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்கவும்


ORS, வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களான லஸ்ஸி, தோரணி (அரிசி நீர்), எலுமிச்சை நீர், மோர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.


எனவே, ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தினங்களில், பயணிகள் மிக கவனத்துடனும் , முன்னெச்சரிக்கையுடன் பயணம் செய்து, வெப்ப அலையில் பாதிப்புக்கு உள்ளாகாதவாறு தற்காத்து கொள்ளுங்கள்.