Chief Minister Stalin - USA: அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
நோக்கியா, பே பால் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது “ தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 20 சதவிகிதம் தமிழ்நாட்டில் உள்ளது. வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
சென்னை அடுத்த சிறுசேரியில் ஆராய்ச்சி மையம் அமைக்க நோக்கியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. PAY PAL நிறுவனத்துடன் ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கோவை சூலூரில் செமி கண்டக்டர் உபகரண ஆலை அமைக்கிறது ஈல்டு என்ஜினியரிங் நிறுவனம். மேலும் இன்பிக்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
4,100 வேலைவாய்ப்புகள்:
உலகின் முன்னணி நிறுவனங்களான நோக்கியா, பெபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் , மைக்ரோசிப், இன்பினிக்ஸ், அப்ளைடு மெட்டிரீயல்ஸ் ஆகிய 6 நிறுவனங்க்ளுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை , கோவை மற்றும் மதுரையில் 4100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் அமெரிக்கா பயணம்:
எதற்காக அமெரிக்கா பயணம் என்பது முதலமைச்சர் ஸ்டாலின் புறப்படும் முன்பு தெரிவித்ததாவது “ தமிழ்நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நமது திராவிட மாடல் அரசு நிர்ணயித்து, அதற்கான பணிகளை முனைப்பாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு வருகிறது. அந்த முனைப்பின் தொடர்ச்சியாகத்தான் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன்.
தேடி வருகின்ற முதலீடுகளைப் போலவே, தேடிச் சென்று முதலீடுகளை ஈர்க்கும் பணியையும், இன்றைய உலளாகவிய பொருளாதாரச் சூழலில் உள்ள போட்டிகளைக் கருத்திற் கொண்டு செயலாற்றி வருகிறது நமது அரசு.
திராவிட மாடல் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 31 இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.
ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்குடனானப் பயணத்தில் மற்றொரு கட்டம்தான், உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளும் இந்த அமெரிக்கப் பயணம் என முதலமைச்சர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.