விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் நடத்தப்படும் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை 31.08.2024 அன்று ஸ்ரீ ரங்க பூபதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செஞ்சியில் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட உள்ளது.
வேலை வாய்ப்பு முகாம்: 100 மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு
வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. எனவே, விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களை சார்ந்த இளைஞர்கள் கலந்து கொளாடு தங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பினை தேர்வு செய்யலாம்.
இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக மேலும் விபரங்களை அறிய ஊரகப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகு, ஊராட்சி அளவில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நகர்ப்புறப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களை தொடர்பு கொண்டு விபரம் பெற்று கொள்ளலாம்.
வேலை வாய்ப்பு முகாமிற்கு எடுத்து வரவேண்டிய ஆவணங்கள்
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்- 2 ஆகியவற்றுடன் முகாமில் கலந்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் ஆண்கள்/பெண்கள் கீழ்காணும் வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 40 வரை உள்ள ஆண்/பெண் (இருபாலரும்).
கல்வித் தகுதி : 8 -ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை
வேலை வாய்ப்பு விவரம் அறிய தொடர்பு எண்
வேலைவாய்ப்பு தொடர்பாக மேலும் விபரம் அறிய சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகு மற்றும் விழுப்புரம் மகளிர் திட்ட அலுவலகம் தொலைபேசி எண். 04146- 223736 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி தெரிவித்துள்ளார்.