தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின், ஓய்வு அறிவுத்தமைக்கு முதலமைச்சர் ஸ்டாலின், கருத்து தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் ஸ்டாலின் - அஸ்வின்


அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், லப்பர் பந்தில் உறவே ஆச உறவே என்ற பாடலை இணைத்து, கிரிக்கெட் பயணங்களை வீடியோவாக வெளியிட்டிருந்தார்.


அந்த வீடியோ பதிவை, முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்திருக்கிறார். மேலும், அத்துடன் கருத்து தெரிவித்ததாவது, “ உங்கள் கிரிக்கெட் பயணங்கள்,  ரசிகர்களுக்கு எண்ணற்ற தருணங்களை அளித்துள்ளது. மேலும், உங்களது பயணமானது, பவுண்டரி எல்லைகளைத் தாண்டி லட்சக்கணக்கானவர்களையும், பெரிய கனவைக் காண தூண்டியுள்ளது. உங்கள் புதிய பயணத்தில், மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


வீடியோ, எக்ஸ் பக்கத்தில் இணைப்பாக உள்ளது


 






ஓய்வை அறிவித்த அஸ்வின்:


இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட 38 வயதான அஸ்வின் இந்திய அணிக்காக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். 2010ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக ஆடினார். அவரது சிறப்பான பந்துவீச்சால் அதே மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகம் ஆனார். பின்னர், 2011ம் ஆண்டு  வெஸ்ட் இணடீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.


537 விக்கெட்:


 இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 140 ரன்களை விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு இன்னிங்சில் 59 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 200 இன்னிங்சில் பந்துவீசியுள்ளார்.




இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 8 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 116 ஒருநாள் போட்டிகளில் ஆடி  156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 65 டி20 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.



தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக மட்டுமின்றி, சிறந்த பேட்ஸ்மேனாகவும் அஸ்வின் அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள், 14 அரைசதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 151 இன்னிங்சில் பேட்டிங் செய்து 3 ஆயிரத்து 503 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் 1 அரைசதத்துடன் 707 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 184 ரன்கள் எடுத்துள்ளார்.


இந்நிலையில், அஸ்வினின் அடுத்தகட்ட பயணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.