சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயிலில் சிக்கி இறப்பவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சேலம், தர்மபுரி, ஓசூர், காட்பாடி, ஜோலார்பேட்டை ரயில்வே காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடப்பாண்டில் இதுவரை 402 பேர் பலியாகி உள்ளனர். அதில் சேலம் ரயில்வே உட்கோட்ட பகுதிகளில் உள்ள சேலத்தில் ஆண்கள் 120 பேரும், பெண்கள் 20 பேரும் என மொத்தம் 140 பேர் பலியாகியுள்ளனர். தர்மபுரியில் 14 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 21 பேரும், ஜோலார்பேட்டை பகுதியில் 120 ஆண்கள் 17 பெண்கள் என மொத்தம் 137 பேரும், காட்பாடியில் 83 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 91 பேரும், ஓசூரில் 10 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 13 பேரும் ரயிலில் சிக்கி பலியாகி உள்ளனர்.
சேலம் உட்கோட்டத்தில் மொத்தமாக 339 ஆண்கள், 63 பெண்களிடம் மொத்தம் 402 பேர் ரயிலில் அடிபட்டு பலியாகி உள்ளன. விருதாச்சலம், ஜோலார்பேட்டை மார்க்கத்தில் ரயிலில் அடிபட்டு இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இமார்க்கத்தில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி குடியிருப்புகள் அதிகளவில் உள்ளது. இப்பகுதி மக்கள் தினமும் காலை தண்டவாள பகுதியில் காலைக்கடன் கழித்து வருகின்றனர். அந்த நேரத்தில் பல ரயிலில் அடிபட்டு இறக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த அவ்வப்போது ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில்வே தண்டவாள பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். அசுத்தம் செய்பவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தண்டவாளத்தை ஒட்டி கிராம மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 402 பேர் ரயிலில் அடிபட்டு பலியாகி உள்ளனர். இதில் ஆண்கள் 339 பேர்களும், பெண்கள் 63 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் 34 பேர் யார் என்று இதுவரை அடையாளம் தெரியவில்லை. தற்போது ரயிலில் அடிபட்டு இறப்போரின் எண்ணிக்கை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.