14 மாவட்டங்கள்:


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


ஆகையால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், சீக்கிரமாக வீட்டுக்குச் சென்றுவிடுங்கள்; தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்வதும் நல்லது.






தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (18-12-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நகரக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை எப்படி இருக்கும்:


18-12-2004: இன்றைய வானிலை


வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இதர தமிழகத்தில்  ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை, செங்கல்பட்டு,மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


19-12-2014: நாளைய வானிலை


வட கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


20-12-2024 முதல் 24-12-2024 வரை:


தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை வானிலை :


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.