நாட்டிலேயே முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூரில்  , பெண் தொழிலாளர்கள் தங்கும் வகையிலான 18, 720 படுக்கைகளுடன் கூடிய ரூ. 705. 50 கோடி மதிப்பிலான விடுதியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 


இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், வல்லம்-வடகால் கிராமத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக ரூ. 706.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 18,720 படுக்கைகள் கொண்ட சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள்  இந்தியாலிலேயே முதன் முறையாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம் வடகால் கிராமத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்காக 706.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 18.720 படுக்கைகள் கொண்ட சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார். 






இந்நிலயில், அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 


தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலை உருவாக்குவதற்கு தேவையான தொழில் முதலீடுகளை அழிப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது அவற்றில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஜனவரி  7 மற்றும் 8  தேதிகளில்  சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 


அம்மாநாட்டின்போது 6,41,60கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையில் உலகளாவிய முன்னணி தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் முன்னெப்போதும் இல்லாத சாதனையாக 631 புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்டன. மேலும் தமிழ்நாடு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கினை அடைவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.