டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தீன்தயாள் உபாத்யாயா மார்க்கில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். மேலும், திமுக அலுவலகத்தில் அண்ணா - கலைஞரின் சிலைகளையும் திறந்து வைத்தார்.






திமுக அலுவலகத்தில் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா குத்துவிளக்கு ஏற்றினர். ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, வைகோ, டி.ராஜா, திருமாவளவன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து, Karunanidhi A Life புத்தகத்தை இந்து என்.ராம் வெளியிட சோனியா காந்தி பெற்றுக்கொண்டார். A Dravidian Journey புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். மேலும், சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.










 


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண