தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.  இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு சாத்தான்குளம் காவல்நிலைய முன்னாள் ஆய்வாளர்  ஸ்ரீதர், முன்னாள் சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

 

இந்த கொலை வழக்கானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர்  ஜாமின் கோஉரிய வழக்கு இன்று நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, பெனிக்ஸ் இன் தாயார் திருமதி. செல்வராணி அவர்களும் தன்னை இந்த வழக்கில் இணை மனுதாரராக அனுமதிக்குமாறு கோரினார். மேலும் ஸ்ரீதர் ஜாமீன் மனுக்கு அரசு தரப்பான சிபிஐ சார்பில் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 



அரசிதழில் இல்லாத பகுதிகளில் வடமாடு மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி இல்லை - தமிழக அரசு




சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார் அதில், "சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, கண்டனூர் கிராமத்தில் ஸ்ரீ கறிவேப்பிலை காளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் படைப்பு திருவிழா வருகிற மார்ச் 29, 30, 31 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் முக்கிய நிகழ்வாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி மார்ச் 31-ஆம் தேதி நடத்த ஊர் மக்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது.வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவது குறித்து அதிகாரிகளிடம் மனு அளித்து எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை.திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மஞ்சுவிரட்டு போட்டிக்காக அனுமதி கோரினால் உடனடியாக அனுமதி அளிக்கப்படுகிறது.எனவே, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா, கண்டனூர் கிராமத்தில் ஸ்ரீ கறிவேப்பிலை காளியம்மன் கோவில் படைப்பு விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி  அளிக்க உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்துவது குறித்து பல்வேறு வழக்குகள் தினம்தோறும் பட்டியலிடப்படுகிறது.அரசிதழில் இல்லாத பகுதிகளில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.அரசு தரப்பில், அரசிதழில் இல்லாத பகுதிகளில் வடமாடு மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.