முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024 நிறைவு விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் துணை முதலமைச்சர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில், 105 தங்கம் , 80 வெள்ளி , 69 வெண்கலப் பதக்கங்களை வென்ற சென்னை அணி முதலிடமும், செங்கல்பட்டு அணி 2ம் இடமும் கோவை அணி 3ம் இடமும் பிடித்துள்ளன. 


அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள். விளையாட்டுகளை மேம்படுத்த திறமையான வீரர்களை ஊக்கப்படுத்துவது அவசியம், விளையாட்டு போட்டிகளை நடத்துவது , மாணவ - மாணவிகளுக்கு உற்சாகத்தை தருகிறது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கியது மகிழ்ச்சியை தருகிறது.  உங்க குழந்தைக்கு Sportsல் ஆர்வம் இருந்தா என்கரேஜ் பண்ணுங்க. 


விளையாட்டு - சிறந்த மாநிலம்


விளையாட்டு போட்டிகளை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்கிறது.  தமிழ்நாடு விளையாட்டுத்துறை பல்வேறு மகத்தான சாதனைகளை புரிந்து வருகிறது. இந்தியாவை மட்டுமல்ல , உலகத்தையே ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு புகழ் பெற்றுள்ளது. தமிழ்ப் பண்பாட்டை உலகுக்கு எடுத்துக் காட்டும் நிகழ்வாக செஸ் ஒலிம்பியாட் அமைந்தது.  உலகையே ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு புகழ்பெற்றுள்ளது. 






”துறை - அமைச்சர்: வளர்ச்சி “


விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி துணை முதலமைச்சரானதில் விளையாட்டு வீரர்களுக்கும் பங்கு உள்ளது. விளையாட்டுத்துறையை சிறப்பாக கவனித்து, இந்தியாவையே உற்றுநோக்க வைத்துள்ளார். விளையாட்டுத்துறையும் வளர்ந்திருக்கிறது, அந்த துறை அமைச்சரும் வளர்ந்திருக்கிறார். 


அவ்விழாவில் சுவாரஸ்ய நிகழ்வாக , ஓவியர் ஒருவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி , முதலைச்சர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுப்பது போன்ற ஓவியத்தை , முதலமைச்சர் கண்முன்னே தலைகீழாக வரைந்து , முதலமைச்சர் ஸ்டாலினிடம் அன்பளிப்பாக வழங்கினார்.