போதைப்பொருடகள் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.


முதலமைச்சர் பதிலுரை:


அப்போது அவர் பேசுகையில், “மார்ச் 2022 ஆம் ஆண்டு ஆப்பரேசன் கஞ்சா 2.0 நடத்தப்பட்டது. 10.08. 2022 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. 11 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ அளவிலான கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக 12, 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வழக்குகளில் 17 ஆயிரத்து 250 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இது போன்று வழக்குகள் பதிவு செய்யப்படுவது, கைது செய்யப்படுவது திமுக ஆட்சியில்தான் நடக்கிறது. கஞ்சா-குட்கா போன்ற போதைப்பொருட்கள் தொடர்பாக விழிப்புணர்வானது கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் இதுபோன்று நடக்கவில்லை. கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சர் மற்றும் காவல்துறையினர் மீதே சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.


அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட போதை பொருட்களை தடுக்கவே, நாங்கள் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.




இதற்கு போதைப்பொருட்கள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசை குற்றச்சாட்டு வைத்து பேசியிருந்தார்.