காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் போகி பண்டிகையின் போது குப்பையை கொளுத்தி சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்கும் வகையில் குப்பை கொளுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சேகரமாகும் குப்பையை கொட்டுவதற்கு 16 இடங்களில் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சியில் போகி பண்டிகை அன்று குப்பையை வீட்டின் வெளியில் கொளுத்தி மாசு அடைவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் குப்பையை பொது இடங்களில் கொளுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
இதையடுத்து, மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை கொளுத்தாமல் கொட்டுவதற்கு, 16 இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் மக்கும் குப்பை தனியாகவும், மக்காத குப்பை தனியாகவும் கொட்டுவதற்கு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் போகி பண்டியின் போது குப்பை கழிவுகளை கொளுத்தாமல் குப்பைத் தொட்டியில் கொட்டுவதற்காக இந்த வசதி ஏற்படுத்தியுள்ளனர். மாநகராட்சியில், அந்தந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டன.
பின் வரும் இடங்களில் , போகி அன்று குப்பைகக்ள் கொடுக்கலாம் ,
வ.எண் | கோட்டம் | வார்டு | இடம் |
1 | 1 | பஞ்சுப்பேட்டை | |
2 | 1 | 3 | ஏகம்பரநாதர் சன்னதி தெரு |
3 | 5 | பூக்கடை சத்திரம் |
|
4 | 2 | 17 | BSNL OFFICE (எதிரில்) |
5 | 19 | PSK 65 (PUMPING STATION) |
|
6 | 3 | 19 | இரயில்வே ரோடு |
7 | 24 | 3 ஆம் கால் திருவிழா மண்டபம் தெரு |
|
8 | 25 | அண்ணா தெரு | |
9 | 4 | 33 | விளக்கொளி கோயில் தெரு |
10 | 5 | 36 | காவலான் தெரு |
11 | 48 | ஓரிக்கை ஜங்சன் | |
12 | 6 | 49 | சதாவரம் மெயின் ரோடு |
13 | 14 | ஆவாக்குட்டை திருவேங்கடம் தெரு |
|
14 | 7 | 11 | திருவேங்கடம் தெரு |
15 | 44 | இரட்டை கால்வாய் | |
16 | 8 | 39 | NGO NAGAR POINT (VACANT LAND) |